அமெரிக்கா – ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ; எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி
அமெரிக்கா – ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகளால் வியாழக்கிழமை (15) எண்ணெய் விலைகள் சுமார் 2 அமெரிக்க டொலர் வரை சரிந்தன.
அதேநேரத்தில், கடந்த வாரம் அமெரிக்க மசகு எண்ணெய் இருப்புகளில் ஏற்பட்ட எதிர்பாராத அதிகரிப்பு அதிகப்படியான விநியோகம் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகரித்தது.
முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 08.06 GMT மணி நேரத்தில் $1.99 அல்லது 3% குறைந்து ஒரு பீப்பாய்க்கு $64.10 ஆக இருந்தது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் விலை $2.05 அல்லது 3.3% குறைந்து $61.10 ஆக இருந்தது.
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்கா மிக அருகில் சென்று கொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும் தெஹ்ரான் அதன் விதிமுறைகளுக்கு “ஒருவிதத்தில்” ஒப்புக்கொண்டது.
தெஹ்ரான் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து இந்த முன்னேற்றம் வந்தது.
இதற்கிடையில், சர்வதேச எரிசக்தி நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் அதன் எண்ணெய் தேவை வளர்ச்சி கணிப்பை ஒரு நாளைக்கு 740,000 பீப்பாய்களாக உயர்த்தியுள்ளது.
இது முந்தைய அறிக்கையை விட 20,000 பீப்பாய்கள் அதிகமாகும். இது அதிக பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்புகள் மற்றும் நுகர்வுக்கு ஆதரவளிக்கும் எண்ணெய் விலைகள் குறைவதை மேற்கோள் காட்டி எடுக்கப்பட்ட தீருமானம் ஆகும்.
OPEC+ என அழைக்கப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் மற்றும் அதன் கூட்டணி உற்பத்தியாளர்களின் அமைப்பு, விநியோகத்தை அதிகரித்து வருகிறது.
இருப்பினும் OPEC புதன்கிழமை அமெரிக்கா மற்றும் பரந்த OPEC+ குழுவிற்கு வெளியே உள்ள பிற உற்பத்தியாளர்களிடமிருந்து எண்ணெய் விநியோகத்தில் வளர்ச்சிக்கான அதன் கணிப்பை குறைத்துள்ளது.