பல மிரட்டல்களுக்கு மத்தியில் 3 மணி நேரம் நடைபெற்ற அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று ஜெனீவாவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நடைபெற்றது. அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.
அதேவேளையில் ஹார்மஸ் ஜலசந்தியை ராணுவ துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாக பல நேரம் மூடப்போவதாக ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.