மனைவியை சுட்டுகொன்ற நீதிபதி: வீட்டில் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி
அமெரிக்காவில் நீதிபதியொருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நிலையில் அவரது வீட்டிலிருந்து 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகர் நீதிபதி ஜெப்ரி பெர்குசன் (வயது 72). இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இந்த தம்பதி அனஹிம் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நீதிபதி ஜெப்ரி பெர்குசன் தனது மனைவி ஷெர்லியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இது தொடர்பாக ஜெப்ரியின் மகன் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளான். முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நீதிபதி ஜெப்ரியை கைது செய்தனர்.
பின்னர், நீதிபதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நீதிபதி ஜெப்ரி 1 மில்லியன் டொலர்கள் பிணையில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.