அடுத்து என்ன செய்ய வேண்டும் என அமெரிக்காவுக்குத் தெரியும் ; ஸெலென்ஸ்கி
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது குறித்து செய்தியாளர்களுடன் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பேசுகையில், “இதற்கு நான் எப்படி பதிலளிக்க முடியும்? நான் என்ன சொல்ல முடியும்?

சர்வாதிகாரிகள்
இதுபோன்ற சர்வாதிகாரிகளைக் கையாள முடிந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே 2022 முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சர்வாதிகாரிகள் என்று பெயரைக் குறிப்பிடாமல் ஸெலென்ஸ்கி யாரைக் குறிப்பிடுகிறார் என்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இருப்பினும், புதினைத் தான் சிறைப்பிடிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி குறிப்பிடுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சனிக்கிழமையில் அமெரிக்க படை கைது செய்தது.