ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா இன்று (26) மீண்டும் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் முக்கிய நகரமான ‘பண்டர் அபாஸ்’ (Bandar Abbas) மீது அமெரிக்கா நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில், ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த ஈரான் கடற்படையின் படகுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் "தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது," என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் திடீர் தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ராணுவம் மீண்டும் பதிலடி கொடுக்குமா? சுமுகமாகச் சென்று கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டு போர் மீண்டும் தீவிரமடையுமா? என்ற பெரும் குழப்பமும், அச்சமும் உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.