அமெரிக்காவில் கொடூர கொலையாளி கூலாக பாட்டுபாடி மகிழ்ச்சி
அமெரிக்காவில் கொடூர கொலையாளி ஒருவரை பொலிஸார் கைது செய்து அழைத்துச்சென்றபோது சந்தேகநபர் கூலாக பாட்டுபாடிய காணொளி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் (41). இவர் தனது பெற்றோரை கொடூரமாக கொலை செய்து தலையை துண்டித்துள்ளார்.
ரொனால்ட் கெர்ட்வில் (77) மற்றும் அன்டோனெட் கெர்ட்வில் (79) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர், கொடூர கொலையாளி பெற்றோர் வளர்த்து வந்த நாயையும் அவர் கொலை செய்துள்ளார்.
வீட்டில் பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்தவரையும் தாக்கியுள்ளார். அத்துடன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கிராபிக்ஸ் போட்டோவை உறவினருக்கு அனுப்பியுள்ளார்.
தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் வீட்டில் இருந்து ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் தப்பி ஓட முயன்றபோது அவரை சுற்றி வளைத்தனர்.
அப்போது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய போலீசார் கேட்டுக்கொண்டனர். எனினும் சந்தேகநபர் சரணடைய மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை சுட்டனர். காயம் அடைந்த நிலையில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் கை விலங்கு போட்டு கைது செய்து அவரது காயத்திற்கு சிகிச்சை அளித்தபோது கூலாக பாட்டு பாடினார்.
பின்னர் போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.