அமெரிக்க இடைக்கால தேர்தல்; இந்தியர் அமோக வெற்றி
அமெரிக்க இடைக்கால தேர்தலில் புளோரிடா மாநிலத்தின் 22-வது நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய-அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் பியா தண்டியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி அஸ்காரை எதிர்த்து போட்டியிட்ட இவர் 51.9 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் புளோரிடாவில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை பியா தண்டியா பெற்றுள்ளார்.
முன்னாள் மேல்நிலைப் பள்ளி முதல்வரான பியா தண்டியா, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றியவர்.
28 வயதிலேயே பள்ளியின் நிறுவன முதல்வராகி நாட்டின் இளம் முதல்வர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
புளோரிடாவின் 22-வது தொகுதி ஜனநாயக கட்சிக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்த நிலையில், இவரது வெற்றி அத்தொகுதியை கைப்பற்ற உதவியுள்ளது.
இதே தேர்தலில் விர்ஜீனியாவின் 10-வது நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய-அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சுகாஸ் சுப்ரமணியம் 61.5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக பராக் ஒபாமாவின் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராகவும், தீயணைப்புப் படை தன்னார்வலராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
பியா தண்டியாவின் இந்த வெற்றி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்திய-அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது