உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் உதவி; கடுப்பில் புடின்
ரஷ்யா - உகரைன் போர் இரண்டு ஆண்டுகளை கடந்துள்ல நிலையில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலதிக இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிப் பொதி ஒன்று உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பு வாகனங்கள், இராணுவ பீரங்கிகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட பல ஆயுதங்களும் உக்ரைக்கு வழங்கப்படவுள்ளன.
உக்ரைனுக்கு 60.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொதியொன்றை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கைக்கு பிரதிநிதிகள் சபையில் உள்ள குடியரசு கட்சியினர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.