ஈரான் தாக்குதலால் சிதைந்த அமெரிக்க இராணுவ முகாம்கள் ; காத்திருக்கும் பல ஆயிரம் கோடி செலவு
ஈரான் தாக்குதலில் 7 வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த இராணுவ முகாம்களைச் சரி செய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானும் பதிலடியாக 7 வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களைக் குறி வைத்து ஏவுகணை, மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் சிலர் இறந்தனர்.

சேத விவரங்கள்
அமெரிக்க இராணுவ முகாம்களில் உள்ள ரேடார், தகவல் தொடர்பு மையங்கள், போர் விமானங்கள், ஓடு தளங்கள் ஆகியவை பலத்த சேதமடைந்தன.
அமெரிக்காவின் வான் பாதுகாப்பையும் மீறி ஈரானின் பழமையான எப்-5 ரக போர் விமானம், அமெரிக்க இராணுவ முகாமுக்குள் தாக்குதல் நடத்தியது.
ஈரான் தாக்குதலில் அமெரிக்க இராணுவ முகாம்களில் ஏற்பட்ட சேத விவரங்களை பென்டகன் முழுமையாக பகிரவில்லை. இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அமெரிக்காவில் ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களே கோபம் அடைந்துள்ளனர்.
சேத விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து பல வாரங்கள் ஆகியும், அது பற்றி எதையும் கூறாமல் கூடுதலாக 200 பில்லியன் டொலர் நிதி ஒதுக்க வேண்டும் என பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தாண்டு இராணுவ பட்ஜெட்டுக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்றம் 838.5 பில்லியன் டொலர் அனுமதி அளித்திருந்தது. ஈரான் போர் தொடங்கிய ஒரு வாரத்துக்குள் 11 பில்லியன் டொலர் செலவானதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.