கரீபியன் கடலில் படகின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் ; பறிபோன உயிர்கள்
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தியதாக மேலும் ஒரு படகின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 3 பேர் பலியானார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.
[D7SW1Mஸ
கரிபீயன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கப்பல்கள் மற்றும் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகின் மீது அமெரிக்க ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் மூன்று பேர் பலியானார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அமெரிக்க ராணுவம் போதைப்பொருள் கடத்தல் கப்பல், படகுகள் மீது சுமார் 38 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 133ஆக அதிகரித்துள்ளது.