17 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!
பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 17 நபர்களின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறி, நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட நபர்களே இவ்வாறு குடியுரிமை பறிப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் தங்களது கடந்தகால குற்றப் பின்னணிகளை மறைத்து, மோசடியான முறையில் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டமை அல்லது குடியுரிமை பெற்ற பின்னர் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்தின்படி, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குடியேறிகளின் குடியுரிமையை ரத்து செய்து, அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கே நாடுகடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு.
இதன்படியே, நாட்டின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.