ஈரானைத் தாக்கத் தயாராகிறதா அமெரிக்கா? வந்திறங்கிய போர் விமானங்கள்
இங்கிலாந்து விமான தளங்களில் 10-க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் பெரிய c-17 ரக போர் விமானங்கள் வந்திறங்கி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஐரோப்பிய பகுதி வழியே வான் பரப்பில் அமெரிக்க விமானங்கள் செல்ல ஏதுவாக இந்த தளம் அமைந்துள்ளது. கடைசியாக இந்த படைதளத்தில் இதுபோன்று அதிக அளவில் c-17 ரக விமானங்கள் வந்து இறங்கியபோது, ஈரானுக்கு எதிரான 12 நாள் போர் நடந்தது.

அமெரிக்க விமானங்கள்
ஈரானின் அணு உலைகளை அமெரிக்க விமானங்கள் கடுமையாக தாக்கின என்பது கவனிக்கத்தக்கது. இந்த விமானங்கள் ஒரு வேளை, கடந்த வாரம் மதுரோவை கைது செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட விமானங்கள் என்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
ஆனால், ஈரான் தலைவர் அலி காமேனியை இலக்காக கொண்டே இவை வந்துள்ளன என யூகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஈரானை அமெரிக்கா தாக்க கூடும் என்றும் பார்க்கப்படுகிறது.
ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.
அமைதியாக போராடும் போராட்டக்காரர்களை வழக்கம்போல் ஈரான் சுட்டு கொன்றால், அவர்களை மீட்பதற்காக அமெரிக்கா முன்வரும். நாங்கள் துப்பாக்கி ஏந்தி, போருக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்று ட்ரம்பும் ஏலவே தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.