மத்திய கிழக்கிற்கு 10,000 தரைப்படை வீரர்கள் வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டம்!
மத்திய கிழக்கிற்கு மேலதிகமாக 10,000 தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்செய்தி வெளியிட்டுள்ளது.
தெஹ்ரானுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவனம் செலுத்தி வரும் போதிலும், அவருக்கு மேலதிக இராணுவ தெரிவுகளை வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இஸ்ரேல் - ஈரான் போரால் உலகளாவிய நீர்தியில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடுகள் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதலை மேற்கொண்ட நிலையில் ஈரானின் பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் பதில் தாக்குதலால் வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.