கனடிய எல்லையில் ஏதிலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, கனடாவின் கியூபெக் மாகாண எல்லை வழியாக ஏதிலிகள் அதிக எண்ணிக்கையில் கனடாவை நோக்கி பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகுின்றது.
மோன்றியலில் செயல்படும் அகதிகளுக்கான சமூக அமைப்பின் பேச்சாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எக்ஸன் கொமிட்டி போர் பீபல்ஸ் வித்தவுட் ஸ்டேடஸ் என்ற Action Committee for People Without Status அமைப்பின் உறுப்பினர் ஃப்ரான்ஸ் ஆண்ட்ரே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சில பாதுகாப்பு திட்டங்களை ரத்து செய்துவிட்டார்.
இந்த திட்டங்களில் இருந்தவர்கள் சிலர், 2026 அல்லது 2027 வரை சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது, அந்த திட்டங்களில் இருந்த மக்களை உடனடியாக நாடு கடத்த ஆரம்பித்துள்ளனர்.
இதனாலேயே அவர்கள் பாதுகாப்பான இடத்தை தேடி கனடாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே எல்லைப் பகுதியில் அகதி கோரிக்கைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளதாக கனடா எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.