சீன ஜனாதிபதி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசியல் நிபுணர்கள்!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xí Jìnpíng) உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளுவதாக அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாஸ்கோவிற்கு கடந்த மார்ச் 20ம் திகதி சென்ற சீன ஜனாதிபதி 3 நாட்கள் தங்கி ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவாளியான புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கவே சீன அதிபர் மாஸ்கோ சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து ராணுவ ஒத்துழைப்பு, ஆயுதபேரம் உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யாவும் சீனாவும் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்க வான்வெளிக்கு உளவு பலூனை அனுப்பியதை சுட்டிக்காட்டி, அமெரிக்காவுடன் சீனா பனிப்போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.