தெருவோரத்தில் குழந்தை போல ஐஸ் க்ரீம் சுவைக்கும் அமெரிக்க அதிபர்; வைரலாகும் புகைப்படங்கள்!
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திடீரென காரை நிறுத்த சொல்லி , தெருவில் நின்று ஐஸ்கிறீம் சுவைத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அவரது ஆட்சிக்கு பல தரப்பிலான கருத்துக்களையும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று பேரிடர் காலத்திலும், அவர் எடுத்த முன்னேற்பாடுகள் அதிகம் பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள பாராக்ஸ் வீதியில், காரில் சென்று கொண்டிருந்த ஜோ பிடன் , திடீரென தனது காரை நிறுத்தும் படி, டிரைவரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக டிரைவரும் காரை நிறுத்தவே, அதில் இருந்து இறங்கிய ஜோ பிடன், அங்கிருந்த ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றிற்குள் நுழைந்து, ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
தொடர்ந்து, அங்கிருந்து வெளியே வந்த ஜோ பிடன், கையில் இரண்டு ஸ்கூப்புடன் கூடிய கோன் ஐஸ் க்ரீமுடன் வெளியே வந்தவர், ஜாலியாக சாலையின் ஓரம் நின்று சுவைக்கத் தொடங்கியுள்ளார்.
அதேவேளை அமெரிக்க அதிபரான ஜோ பிடன், மிகப் பெரிய ஐஸ் க்ரீம் பிரியர் ஆவார். அடிக்கடி அவர் பொது இடங்களில் ஐஸ் க்ரீம் சாப்பிடும் நிகழ்வுகள், அதிக அளவில் வைரலாகும். அ தே போல, தற்போதும் அவர் சாலையோரம் நின்று ஐஸ் க்ரீம் குடித்த புகைப்படம், அதிகம் வைரலாகி வருகிறது.

