உக்ரைன் மக்களின் மனஉறுதியை பாராட்டிய அமெரிக்க அதிபர்!
அமெரிக்க மக்கள் உக்ரைன் மக்களின் இரும்புபோன்ற மன உறுதியிலிருந்து உத்வேகம் பெறவேண்டும் என அமெரிக்க அதிபர் பைடன் (Joe biden) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகரை புட்டினால் டாங்கிகள் மூலம் சுற்றிவளைக்க முடியும் என்றும், ஆனால் அவரால் உக்ரைன் மக்களின் இதயத்தையும் ஆன்மாவையும் வெற்றிகொள்ள புட்டினால் (Vladimir Putin) முடியாது எனவும் பைடன் (Joe biden) தெரிவித்துள்ளார்.
அதேவேளை ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் இன்றும் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
மேலும் ரஷ்யாவின் மூர்க்கதனமாக தாக்குதல்களினால் உக்ரைன் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.