அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இஸ்ரேலின் கௌரவ பதக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இஸ்ரேல் ஜனாதிபதி கௌரவ பதக்கத்தை (Israeli Presidential Medal of Honor) வழங்குவதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் அறிவித்துள்ளார்.
காசா போர்நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்த அமெரிக்க தலைவரின் பங்கை அங்கீகரிப்பதற்காகவும், பணயக் கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்ததற்கும் இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதக்கம் இஸ்ரேலுக்கோ அல்லது மனித குலத்திற்கோ சிறந்த பங்களிப்பைச் செய்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்தவகையில் நெசெட் (Knesset) கூட்டத்தில், ட்ரம்ப்பிற்கு இந்த பதக்கம் வழங்குவதற்கான தனது முடிவை ஜனாதிபதி ஹெர்சாக் முறைப்படி அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இஸ்ரேலிய ஜனாதிபதியின் கௌரவ பதக்கத்தை ட்ரம்ப்பிற்கு வழங்குவது ஒரு "பெரிய மரியாதை" என்று இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.