முதல் முறையாக இஸ்ரேல் சென்றார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு இணங்கிய நிலையில் காசாவில் அமைதி ஏற்பாடுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றுள்ளார்.
முதல் முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்பை, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், பிரதமர் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர்.
ஹமாஸ் அமைப்பினால் 7 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, ட்ரம்ப் இஸ்ரேல் சென்றுள்ளார்.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் குடும்பத்தினரை ட்ரம்ப் சந்திப்பதோடு, இஸ்ரேல் நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து, தனது இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்துகொண்டு, அங்கிருந்து ட்ரம்ப் எகிப்து செல்லவுள்ளார். மேலும் எகிப்தில் இன்று (13) நடைபெறும், காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.