அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்; கமலா ஹாரிஸ் 241 , டிரம்ப் 248!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பரபரப்பாக உள்ள நிலையில் கமலா ஹாரிஸை பின் தள்ளி டிரம்ப் முன்னனிலையில் உள்ளார்.
அதன்படி சற்றுமுன் வெளியான தகவல் படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 241 தொகுதிகளிலும் டிரம்ப் 248 தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளனர்.
அதேவேளை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை அறிய அமெரிக்க மக்கள் மட்டுமன்றி உலகமே ஆவலாக காத்திருக்கின்றது.
இந்த ஜனாதிபதித் தேர்தல் ஆண்டில், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதுடன் அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2028 ஆண்டு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியை நோக்கி டிரம்ப்
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி டிரம்பை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற்றார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால் ஆடுகளம் டொனால்ட் டிரம்பின் பக்கம் சாய்வது போல தோன்றுகின்றது. நோர்த்கரோலினாவை தொடர்ந்து ஜோர்ஜியாவிலும் குடியரசுகட்சியினர் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் வரைபடம் தற்போது 2016 இல் காணப்பட்டது போல காணப்படுகின்றது என்றும் பிபிசி தெரிவித்துள்ளது