இடைத்தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா ; ட்ரம்ப் வெளியிட்ட விடயம்
அமெரிக்க இடைத்தேர்தலை தொடர்ந்து ஈரான் மீது தனது முதல்கட்ட தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ள நிலையில், இந்த சமீபத்திய ராணுவ நடவடிக்கையை மிகச்சிறிய அளவிலான தாக்குதல் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவரித்துள்ளார்.
நிலையில் ஈரான் வர்த்தக போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள கெஷ்ம் தீவின் சூசா பகுதியில் அமெரிக்கா தாக்குதலை நேற்று நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலை, ஈரான் செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், “அவர்கள் ஒரு சிறிய விமான எதிர்ப்பு சாதனத்தை உருவாக்கினார்கள்.
அதற்கு 15 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை நாங்கள் சுமார் 5 நிமிடத்தில் செயலிழக்க செய்தோம்” என்று கூறினார்.
அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் முன்னேற முடியாது என திட்டவட்டமாக கூறினார். இது ஒரு தற்காப்பு நடவடிக்கை தான் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் சுதந்திரமாக செல்வதை தடுக்கும் ஈரானின் முயற்சிகளை முறியடிக்கவே, இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.