கனடா மீதான வரி விதிப்பு குறித்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு
கனடா மீதான வரி விதிப்பு குறித்த அமெரிக்காவின் காலக்கெடு நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் வர்த்தக பங்காளிகள் மீது விதிக்கப்படவுள்ள வரிகளை ஆகஸ்ட் 1 முதல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடைசி நாளில் எந்தவித மாற்றமுமோ நீடிப்புமோ இல்லை என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) தெரிவித்துள்ளார்.
எந்த நீட்டிப்பும் இல்லை, மேலதிக சலுகைகளும் இல்லை. ஆகஸ்ட் 1 அன்று வரிகள் நிச்சயமாக அமலுக்கு வரும். சுங்கவரி வசூலிக்கத் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரிகள் அமலுக்கு வந்த பிறகும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரிகளுடன் ஸ்கொட்லாந்தில் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் லட்னிக் தெரிவித்தார்.
ஐரோப்பியர்கள் ஒப்பந்தம் ஒன்றை எதிர்பார்க்கின்றனர் எனவும் இந்த பேச்சுவார்த்தையின் தலைவராக இருப்பவர் டிரம்ப் தான். எனவும் பேச்சுவார்த்தை மேசையை நாங்கள்தான் அமைத்தோம்" எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 1 வரி திகதிக்கு முன்னதாக ஐந்து நாடுகள் – பிரிட்டன், வியட்நாம், இண்டோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் – டிரம்ப் நிர்வாகத்துடன் ஒப்பந்தங்களை செய்து வைத்துள்ளன.
அமெரிக்கா ஏப்ரல் மாதம் முதல் பெரும்பாலான நாடுகளுக்கு விதித்த 10% அடிப்படை வரிக்கு மேலாகவே இந்நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்நாடுகள் ஒப்புக்கொண்ட விகிதங்கள், ஒப்பந்தம் செய்யாதவைகளுக்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்த அதிக அளவிலான வரிகளைவிட குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.