அமெரிக்கா கைப்பற்றிய ஐந்தாவது எண்ணெய் கப்பல்
கரீபியன் கடலில் மேலும் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியுள்ளது.
வெனிசுவேலாவுக்கு எதிரான அழுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் தடை விதித்துள்ள கப்பல்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒலினா’ (Olina) எனப்படும் எண்ணெய் கப்பல் எவ்வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒருமுறை, எங்கள் பல்துறை இணைந்த படைகள் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன – ‘குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான தஞ்சம் எங்கும் இல்லை’” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் ஏன் இலக்காக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க தரப்பு மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.
அமெரிக்கா இவ்வாறு எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவது ரஷ்யாவுடனான பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.