விபரீத முடிவு எடுப்பதற்கான ஆபத்து அதிகம்; புடின் தொடர்பில் கவலை வெளியிட்ட அமெரிக்க செனட்டர்!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் (Vladimir Putin) அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் என அமெரிக்க செனட்டர் இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுடனான நேர்காணலில் போதே செனட்ட வெளியுறவுத்துறை கமிட்டி தலைவர் பாப் மெனெண்டஸ் (Bob Menendez) இதனை கூறியுள்ளார்.
உக்ரைன் ராணுவத்தின் தொடர் வெற்றி காரணமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் (Vladimir Putin) அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் புடின் (Vladimir Putin) தனது மரியாதையை காப்பாற்ற அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் என நான் அஞ்சுவதாக தெரிவித்த அவர், உக்ரேனியர்கள் பெரும் வெற்றியை விட, புடின் (Vladimir Putin) தோற்பதால், சொந்த நாட்டில் தனது பெயரை காப்பாற்றிக்கொள்ள, அவர் ஏதேனும் விபரீத முடிவு எடுப்பதற்கான ஆபத்து அதிகம் என்பதே என முக்கிய கவலைகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
அதன் விளைவாக ரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கூடும் எனவும் பாப் மெனெண்டஸ் (Bob Menendez) கவலை வெளியிட்டார்.