உயிர்காக்கும் உபகரணங்களுடன் இந்தியா நோக்கி புறப்பட்ட அமெரிக்க கப்பல்

Sulokshi
Report this article
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வரும் நிலையில் உயிர்காக்கும் உபகரணங்களுடன் அமெரிக்க முதல் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவத்தினால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த கடினமான சூழலில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்படவும், உதவவும் ரஷ்யா, இங்கிலாந்து, தைவான் போன்ற உலக நாடுகள் முன்வந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான துரித பரிசோதனை கருவிகளுடன் முதலாவது நிவாரண கப்பல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளது. இது விரைவில் இந்திய வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.