பெரும் சரிவை சந்தித்தது அமெரிக்க பங்குச் சந்தை ; ட்ரம்பின் வரியால் வந்த வினை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று (03) அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தையின் S&P 500 விலைச் சுட்டெண், 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கொவிட் காலத்துக்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார சுபீட்சத்தை நோக்காகக் கொண்டு இந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தாலும், நிலைமை மாறுதலாக இருப்பதாக பொருளியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கப் பங்குச் சந்தை மாத்திரமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.