அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு கோல்ட் கார்ட் ; ஆனால் 5 மில்லியன் டாலர் தேவை
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்ட் கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார்.
கோல்டு கார்ட் - 5 மில்லியன் டாலர்
அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்கு காங்கிரஸின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.