அமெரிக்க விசா கட்டாய உரிமை இல்லை ; வெளியான முக்கிய தகவல்
அமெரிக்க விசா என்பது எவருக்கும் வழங்க வேண்டிய கட்டாய உரிமை இல்லை; அது ஒரு அனுமதி மட்டுமே,'' என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுஉள்ளார்.

இதன் முதற்கட்டமாக, ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் நடந்த 'ஐரோப்பிய பாதுகாப்பு' கருத்தரங்கில் பங்கேற்ற அவர், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்கா விசா என்பது எவருக்கும் கட்டாயம் வழங்க வேண்டிய உரிமை இல்லை; அது ஒரு நாட்டிற்குள் நுழைய வழங்கப்படும் அனுமதி மட்டுமே.
ஒரு நபர் சுற்றுலா பயணியாகவோ, மாணவராகவோ அல்லது செய்தியாளராகவோ அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டு, அங்கு அமெரிக்காவின் தேசிய நலன்கள் அல்லது பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டால், அவரது விசா உடனடியாக ரத்து செய்யப்படும்.
விசா விண்ணப்பதாரர் இத்தகைய செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தால், அவருக்கு விசாவே வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.