ஹோர்முஸ் அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம் ; ஈரான் தகவல்
ஹோர்முஸ் அருகே எதிரி நாட்டைச் சேர்ந்த எப்15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
23 நாட்களாக நீடித்து வரும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரினால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான நீர் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நீரிணையை திறக்க ஈரானுக்கு 48 மணிநேரம் கெடு விதித்தார்.
இந்த நிலையில், ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோர்முஸ் தீவு அருகே, எப்-15 ரக விமானத்தை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான் 400 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 92 சதவீத ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.