தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்க இந்த பவரை பயன்படுத்துவேன்! போலாந்து அதிபர்
போலந்தில் தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளவும், தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தன்பாலின மக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதா தொடர்பில் நாடாளுமன்றம் பரிசீலனை செய்து வருகிறது.
இதேபோல் தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தன்பாலிய ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்டத்தை கொண்டு வர வீட்டோ பவரை பயன்படுத்துவீர்களா? என போலாந்து ஜனாதிபதி அன்ட்ஸெஜ் டுடாவிடம் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த அன்ட்ஸெஜ் டுடா,
"யாரிடமும் மறைப்பதற்கு இதில் ரகசியம் ஏதும் இல்லை. நான் தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான முடிவுக்கு எதிரானவன் அல்ல. இது குழந்தைகள் பாதுகாப்பது தொடர்பான விடயம்" என்றார்.