மனைவியை சுட்டு கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
அமெரிக்காவில் இரவில் அயல்வீட்டுகாரர்களுடன் விளையாடிவிட்டு மனைவியை சுட்டு கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் மனைவி, குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வந்தவர் ஆலின் ஜான்சன் (வயது 57). இவருடைய மனைவி கெரிலின் ஜான்சன் (வயது 52). இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்திற்கு முந்தின நாள் இரவில் விளையாட்டு
சமீபத்தில் இவர்கள் தங்களுடைய 32-வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் ஜான்சன் அவருடைய மனைவி கெரிலினை சுட்டு கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் எனினும், இந்த சம்பவத்திற்கான உள்நோக்கம் பற்றி போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம் , ஆலின் கடைசியாக வெளியிட்ட பதிவுகள் அவருக்கு, மனநலம் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அதில், தன்னை உடல்நலம் பாதித்த நபர் என கடைசியாக குறிப்பிட்டு இருக்கிறார்.
சம்பவம் தொடர்பில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகையில் , சம்பவத்திற்கு முந்தின நாள் இரவில் எங்களுடன் ஒன்றாக அவர்கள் சாப்ட்பால் விளையாடினார்கள்.
வருங்கால திட்டங்களை பற்றி ஆலின் எங்களிடம் கூறினார். அதனால், அவரிடம் எந்த சிக்கலும் இருந்ததுபோன்று எங்களுக்கு தெரிய வரவில்லை என கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் பலியானது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.