புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு ; அதிபர் புதின் அறிவிப்பு
ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிவதில் இறுதிக்கட்டத்தில், வெற்றியை கண்டுள்ளதோடு விரைவில் தடுப்பூசிகள் பொது மக்களின் பயன்பாட்டு வரும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மாஸ்கோவில் நடந்த வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் ரஷ்ய அதிபர் கூறுகையில்,
புற்றுநோய்க்கு தடுப்பூசி
உலகெங்கும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்று நோய், அரசு மற்றும் அரசு சாரா பல அமைப்புகள் புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கோடிகளை செலவழித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இங்கிலாந்து – ஜெர்மனி நாடுகளும் இணைந்து புற்றுநோய்க்கான நிரந்தர தீர்வு தரும் மருந்தை கண்டறியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைக்க உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான தடுப்பூசியை கண்டறியும் பணி இறுதிக்கட்டத்தில், வெற்றியை நெருங்கும் நிலையில் உள்ளது.
ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் தடுப்பூசிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் இந்த தடுப்பூசிகள், எந்த வகையான புற்றுநோயை குணப்படுத்த உதவும் என்பது பற்றி புதின் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.