கனடாவில் ஈழத்து இசை நாயகர்களுக்கு கிடைத்த கௌரவம் ; 'வேல்' வழங்கிப் பாராட்டிய அமைச்சர்

Jaffna Sri Lankan Peoples Tamil diaspora Canada
By Viro Jan 26, 2026 01:09 AM GMT
Viro

Viro

Report

கனடாவின் டொரன்ரோ நகரில் அமைந்துள்ள டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), அன்று 'எங்கட பெடியள்' என்ற கருப்பொருளில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.

இதன் போது இலங்கையின் வளர்ந்து வரும் இசைக்கலைஞரான ரெப் பாடகர் வாகிசன் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

கனடாவில் ஈழத்து இசை நாயகர்களுக்கு கிடைத்த கௌரவம் ;

 தமிழ் சமூக மையம்

மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 'வாகீசன் லைவ் இன் டொரன்ரோ' (Vaheesan Live in Toronto) இசைச் சங்கமம், உலகத்தமிழர்களை இசையாலும் உணர்வாலும் ஒன்றிணைக்கும் ஒரு வரலாற்றுப் பாலமாக அமைந்திருந்தது.

கனடாவில் ஈழத்து இசை நாயகர்களுக்கு கிடைத்த கௌரவம் ;

இக்கலைவிழாவில், 'சிலோன் ராப்' சொல்லிசைக் கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒன்ராறியோ மாநில சுகாதார இணை அமைச்சரும், ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்கள், சொல்லிசைக் கலைஞர்களை நேரில் பாராட்டி கௌரவித்ததுடன் ஒவ்வொரு கலைஞரின் தனித்துவத்திற்கும் ஏற்ப பெறுமதிமிக்க நூல்களை பரிசாக வழங்கியுள்ளார்.

கனடாவில் ஈழத்து இசை நாயகர்களுக்கு கிடைத்த கௌரவம் ;

இந்த நிகழ்வின் மிக முக்கிய சிறப்பம்சமாக, பாடகர் வாகீசனுக்கு ஒரு 'வேல்' பரிசாக வழங்கப்பட்டது. வாகீசனை எதிர்காலத்தின் ஒரு சிறந்த தலைமையாகக் கருதுவதாகவும், அதன் அடையாளமாகவே இந்த வேலை அவருக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் டொறன்ரோவில் அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்திற்காக ஒரே இரவில் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது.  உலகளாவிய தமிழ்ச் சூழலில், புலம்பெயர் தமிழ் மக்களால் கட்டப்படும் முதலாவது தமிழ் சமூக மையம் இது என்பதால், எமது எதிர்கால சந்ததியினருக்காக ஒரு நிரந்தரமான இடத்தை உருவாக்கித் தரும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்று தமிழ்ச் சமூகம் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.

கனடாவில் ஈழத்து இசை நாயகர்களுக்கு கிடைத்த கௌரவம் ;

இந்த விழா டொரன்ரோ வாழ் தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியையும், இளம் சொல்லிசை கலைஞர்களுக்கான கௌரவத்தையும் ஒருசேர வழங்கிய ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US