12 வயதில் கொல்ப்பில் சாதனை படைக்கம் வான்கூவார் சிறுமி
கனடாவின வான்கூவாரைச் சேர்ந்த 12 வயதான சிறுமி கொல்ப் விளையாட்டில் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
சீ.பி. மகளிர் திறந்த கொல்ப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்ட மிக இள வயதானவர் என்ற பெருமையை 12 வயதான லுகீ லின் பெற்றுக்கொள்கின்றார்.
ஒன்பது வயதிலேயே லின் கொல்ப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த வீரர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர்களை சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் லின் தெரிவிக்கின்றார்.
சீ.பீ. மகளிர் திறந்த கொல்ப் போட்டித் தொடரில் லின் உள்ளிட்ட 12 கனேடிய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் தாம் பதற்றமடைந்து விடுவதாகவும், முடிந்தளவு அமைதியாக இருக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக லின் தெரிவிக்கின்றார்.