கனேடியரை பிடித்து கீழே தள்ளிய பொலிசார்... வெளியான வீடியோவால் சிக்கல்
கனேடியர் ஒருவரை பொலிசார் கீழே தள்ளும் வீடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து வான்கூவர் பொலிசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெண் ஒருவரை பொலிசார் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு ஆண் அவர்களை நெருங்கி ஏதோ கேட்க முயல, பொலிசார் ஒருவர் அவரைப் பிடித்து தள்ளிவிட்டார். அந்த பொலிசார் தள்ளியதில் அந்த ஆண் தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
இந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அத்துடன், மற்றொரு பொலிசார் வீடியோ எடுப்பவரை நெருங்கி அந்த மொபைலை தன்னிடம் கையளிக்குமாறும் கேட்டுள்ளார்.
முதலில் இந்த சம்பவம் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்திருந்தாலும், இப்போதுதான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆகவே, புதிய ஆதாரம் கிடைத்துள்ளதையடுத்து வழக்கு சூடு பிடித்துள்ளது.