கனடா பிரதமரை சாப்பிடக்கூடவிடாமல் தொந்தரவு செய்த பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்
கனடாவில் உணவகம் ஒன்றில் இரவு உணவருந்தச் சென்ற கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, செவ்வாய்க்கிழமை இரவு வான்கூவரிலுள்ள உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றுள்ளார்.
அப்போது, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் உணவகத்துக்குள் நுழைந்து, ட்ரூடோவை சுற்றிவளைத்துள்ளனர்.
PHOTO BY PALSOLIDARITYCAD/INSTAGRAM
உடனே போர் நிறுத்தம் வேண்டும், ஜஸ்டின் ட்ரூடோ, உங்கள் கைகளில் இரத்தக்கறை உள்ளது, நீங்கள் ஒரு கொலைகாரர், எங்களுக்கு பதில் சொல்லுங்கள் என்றெல்லாம் கோஷம் எழுப்பியது அந்தக் கூட்டம்.
ஆகவே, உணவருந்த வந்த ட்ரூடோ, உணவருந்தாமலே உணவகத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. விடயம் என்னவென்றால், அதேநாள் மாலையில், இந்திய உணவகமான Vij’s என்னும் உணவகத்துக்குச் சென்றுள்ளார் ட்ரூடோ. அங்கேயும் சென்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டு கோஷம் எழுப்பியுள்ளார்கள்.
வான்கூவர் உணவகத்திலிருந்து ட்ரூடோ வெளியேறியதும், பொலிசார் கூட்டத்தைக் கலைக்க முயன்றுள்ளார்கள். அப்போது, 27 வயது நபர் ஒருவர் பெண் பொலிசார் ஒருவரை முகத்தில் குத்திக் காயப்படுத்தியதுடன், அவரது கண்களை விரல்களால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.
அவரும், பொலிசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 34 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வான்கூவர் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |