கனடாவில் வாகன சோதனையின்போது சிக்கிய போதைப்பொருள்
கனேடிய நகரமொன்றில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று முகப்பு விளக்குகள் எரியாத நிலையில் பயணிப்பதைக் கண்டு அந்தக் காரை நிறுத்தியுள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள Greater Sudbury நகரில், கடந்த வார இறுதியில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 2.00 மணியளவில், முகப்பு விளக்குகளை அணைத்த நிலையில் பயணித்த கார் ஒன்றைக் கண்டு, அந்தக் காரை நிறுத்தியுள்ளார்கள்.
உடனே, காருக்குள்ளிருந்தவர்கள் எதையோ மறைத்துவைக்க முயல்வதை பொலிசார் கவனித்துள்ளார்கள்.
அது போதைப்பொருள் என தெரியவரவே, காருக்குள்ளிருந்த மூன்று பேரைக் கைது செய்ய முயன்றுள்ளார்கள் பொலிசார்.
அப்போது அவர்களில் ஒருவர் தப்பியோட முயல, பொலிசார் அவரைத் துரத்திச் சென்று பிடித்துள்ளார்கள்.
தான் பொலிசாரிடம் சிக்கிக்கொள்ளப்போவதை உணர்ந்த அந்த நபர் உடனே எதையோ தூக்கி வீசியுள்ளார்.
பொலிசார் அது என்ன என பார்க்க, அவர் தன்னிடம் கூடுதலாக கொஞ்சம் போதைப்பொருளை ஒளித்துவைத்திருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்த போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ள பொலிசார், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.