நிக்கோலஸ் மதுரோ கைது; வெனிசுலாவின் இடைக்கால அதிபர் பதவியேற்பு!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக, வெனிசுலாவின் துணை அதிபராக பணியாற்றிய டெல்சி ரோட்ரிக்ஸ், பதவியேற்றார்.

மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன்...
ரோட்ரிக்ஸுக்கு அவரது சகோதரரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உறுதி மொழி ஏற்பதற்கு முன், எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுலா மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன் என்று அவர் தனது வலது கையை உயர்த்தி கூறினார்.
அவர் நிதி மற்றும் எண்ணெய் மந்திரியாகவும் உள்ளார். துணை அதிபர் பொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் மந்திரியாக இருக்கும் காரணத்தால் வெனிசுலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார்.
1969 மே 18 அன்று வெனிசுலா காரகாஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை ஆவார்.