வெனிசுலா ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு ; அமெரிக்காவிற்கு வாய்ப்பு கிட்டுமா?
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ், தன் முதல் உரையில், நாட்டின் முக்கிய கச்சா எண்ணெய் தொழில் துறையை வெளிநாட்டு முதலீட்டுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்தார். அவர் போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக கூறி, அமெரிக்க ராணுவம் அந்நாட்டிற்குள் ஊடுருவி கடந்த 3ம் தேதி தாக்குதல் நடத்தியது.

சிறையில் மதுரோ
மேலும், அதிபர் மாளிகைக்குள் புகுந்து நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து அமெரிக்கா அழைத்து வந்தனர். இருவரும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வெனிசுலா அரசியல் சாசன சட்டப்படி துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றார். அவர் முதன் முறையாக ஜனாதிபதியாக நேற்று உரை நிகழ்த்தினார்.
அதில் கூறியதாவது: அரச வசம் உள்ள நாட்டின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் தொழிலை வெளிநாட்டு முதலீட்டுக்கு அதிக அளவில் திறக்க வேண்டும். அதற்காக ஒரு புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கிடைக்கும் வருவாய், சுகாதார சேவை, உட்கட்டமைப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். முன்னாள் ஜனாதிபதி மதுரோவை நாட்டிற்குள் புகுந்து அமெரிக்கா கைது செய்தது இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள அழியாத கறை. இருப்பினும் இரு தரப்பு துாதரக உறவை நினைத்து பயப்பட தேவையில்லை என குறிப்பிட்டார்.