மிகவும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு ; அமெரிக்காவை கண்டித்த வெனிசுலா ஜனாதிபதி
வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த செயல் மிகவும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு என வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனிடையே, சனிக்கிழமை (03) அ அமெரிக்கா வெனிசுலாவின் உள்ளகப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியதாகவும், இது கடந்த சில வாரங்களாக நாட்டு மக்கள் அச்சத்துடன் எதிர்பார்த்த ஒரு பெரும் பதற்ற நிலையாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுலாவின் நிலப்பரப்பும் மக்களும் மீது அமெரிக்காவின் தற்போதைய அரசு மேற்கொண்ட இந்த மிகக் கடுமையான இராணுவத் தாக்குதலை, சர்வதேச சமூகத்தின் முன் வெனிசுலா மறுத்து, கண்டித்து, நிராகரிக்கிறது,” என மதுரோவின் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, உலகின் பல நாடுகளும் தங்களது எதிர்வினைகளை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.