கனடா புகைப்படக் கலைஞர் எடுத்த ராட்சத கொடிய விஷமுள்ள சிலந்தி
கனடா புகைப்படக் கலைஞர் உலகின் மிகவும் விஷமுள்ள சிலந்தி ஒன்றின் புகைப்படத்தை எடுத்துள்ளார்.
கனடா நாட்டின் ஒன்றாரியோவை சேர்ந்த பிரபல புகைப்படக் காலிங்கர் கில் விசன். இவர் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது வென்றவர்.
சமீபத்தில் இவர் ஈக்வடாரின் நாபோவில் தனது அறையில் தங்கியிருந்தபோது சிறிய சிலந்திகள் வந்து செல்வதைக் கண்டுள்ளார். மேலும் அவை எங்கு செல்கிறது என பின் தொடர்ந்த அவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் உலகின் மிகவும் விஷம் வாய்ந்த பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் என்ற ஸ்பைடரைக் கண்டார். மேலும் அந்த சிலந்தியை அவர் புகைப்படமும் எடுத்தார்.
பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் உலகின் மிக கொடிய சிலந்திகளுள் ஒன்றாகும். இவை அதிகம் வாளி மரங்களில் காணப்படுவதால் இவை வாழை சிலந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இவை இரையாக சிறிய பூச்சிகளை எடுத்துக்கொள்ளும் என தெரியவந்துள்ளது.