ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு
மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கிற்கு எதிர்வரும் 17ஆம் திகதி அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தண்டனையை அறிவிக்கவுள்ளது.
சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கடந்த ஓகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுடுவதற்கு ஹசீனா உத்தரவிட்ட குரல்பதிவு வெளியானது.
இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் பொலிஸ் ஐ.ஜி ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை வரும் 17ஆம் திகதி வெளியிட இருப்பதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.