கனடாவிற்கு புதியவரா நீங்கள்
கனடாவிற்குள் புதிதாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்டு மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவை மையமாகக் கொண்ட சட்டத்தரணி என்ற போர்வையில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் குடியேற விரும்பும் இந்த மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டத்தரணி போன்றே இந்த காணொளி உருவாக்கப்பட்டது.
பிரபல குடிவரவு சட்டத்தரணி மெக்ஸ் சவுத்திரி என்பவரைப் போன்றே போலி காணொளி தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு போலிக் காணொளிகள் மூலம் மோசடிகள் இடம்பெறுவதாகவும் கனடாவிற்கு புதிதாக வந்தவர்கள் குடியேறுவதற்கு சாத்திருப்போர் இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.