கனடாவில் பனி மழையால் ரயில்கள் தாமதம்
டொராண்டோ, ஒட்டாவா, மற்றும் மொன்றியால் இடையே இயக்கப்படும் VIA Rail பயணிகள் ரயில்கள், பெய்த பனிமழை காரணமாக தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
VIA Rail, கோபர்க் மற்றும் பெல்வில்லுக்கு இடையில் உள்ள CN Rail பாதைகளில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டிருப்பதால் ரயில்கள் தாமதமடைகின்றன என்று தெரிவித்துள்ளது.
"இந்த சிக்கல்கள், தொடர்ந்து நீடிக்கும் பனிமழை மற்றும் பனிக்கட்டிப் புயல் காரணமாக ஏற்பட்ட மின்தடை விளைவாக ஏற்பட்டுள்ளன.
இதனால், அந்த பகுதிகளில் பல்வேறு ரயில் கடவைகள் செயலிழந்து, ரயில் போக்குவரத்தில் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது," என VIA Rail தெரிவித்துள்ளது.
டொராண்டோ-ஒட்டாவா மற்றும் டொராண்டோ-மொன்றியால் இடையே இயக்கப்படும் ரயில்கள் குறைந்தது 60 நிமிடங்களாவது தாமதமாகும், சில ரயில்கள் அதற்கும் அதிக நேரம் தாமதமாகும் என்று VIA Rail தெரிவித்துள்ளது.