வீடுகளுக்குள் புகுந்து ஆயுத முனையில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட ஜோடி கைது
ஸ்காப்ரோவில் வீடுகளுக்குள் புகுந்து ஆயுத முனையில் துணிகர கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஓர் ஜோடிக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
றொரன்டோவைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து கத்தியை கண்பித்து இந்த ஆணும் பெண்ணும் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு உரிமையாளரை கத்தியை காண்பித்து மிரட்டி பணம் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்த காரணத்தினால் வீட்டு உரிமையாளர் தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர், அயல் வீடு ஒன்றுக்கு சென்று அங்கு ஆயுத முனையில் பணம் கொள்ளையிட்டதாகவும் மற்றுமொரு வீட்டுக்கு சென்று அங்கும் பணம் கொள்ளையிட முயற்சித்த போது வீட்டு உரிமையாளரை இவர்கள் கத்தியால் குத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 28 வயதான ஆண் ஒருவரையும், 39 வயதான பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.