தேடப்பட்டு வருவோர் பட்டியலில் கனேடியரை இணைத்த சீனா
பிரிட்டிஷ் கொலம்பிய ஊடகவியலாளர் சீனாவின் தேடப்படும் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஊடகவியலாளர் ஒருவர் சீனாவின் தேடப்பட்டு வருபவர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
சீன கனடிய பத்திரிகையான சிங் தாவோ நாளிதழின் ( Sing Tao Daily) முன்னாள் ஆசிரியரான விக்டர் ஹூ (Victor Ho) என்ற ஊடகவியலாளருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த ஊடகவியலாளரை தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைத்துள்ளனர். தேசிய பாதுகாப்பு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக ஹு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை கனேடிய புலனாய்வு பிரிவினர் ஹு வின் வீட்டுக்குச் சென்று அவர் அவரை சந்தித்துள்ளனர்.
தனது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூடுதல் அவதானம் செலுத்துமாறும் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தம்மிடம் கூறியதாக ஹு தெரிவித்துள்ளார்.
தம்மை தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைத்தமை தொடர்பில் சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாங்காங்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முனைப்புகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களின் ஹுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.