"தளபதி-66" படத்தில் விஜய் அவர்களுக்கு வில்லனாகும் மற்றுமொரு கதாநாயகன்...யார் தெரியுமா?
தளபதி விஜய் அவர்களின் அடுத்த படமான தளபதி 66 படத்தில் அவருக்கு வில்லனாக மற்றுமொரு பிரபல கதாநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது தனது 65 வது படமான 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது விஜய் தனது அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் . ‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
மேலும் பிரபல இயக்குனர் வம்சி படிப்பலி இயக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல கதாநாயகன் நானி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தளபதி அவர்களின் மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு கதாநாயகன் தளபதிக்கு வில்லனாகி இருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.