வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராம மக்கள்: எங்கு தெரியுமா?
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானத்தையே பயன்படுத்தி வருகிறார்களாம்.
இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம்.
கேமரூன் ஏர்பார்க் கிராமத்தை கழுகு பார்வையில் பார்த்தால் விமான நிலையம்போல் காட்சியளிக்கிறது.
விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்களை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த கேமரூன் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளாக இருக்கிறார்கள்.
இவர்களுடன் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமம் 1963 -ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன.
விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறக்கவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் 100 அடி அகலத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.