பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூர சம்பவம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பெண்கள் பலி
பாகிஸ்தானில் நேற்று கிறனேட் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சியி ன் பால்தியா (Baldia) பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ட்ரக் வாகனம் ஒன்றின் மீது கிறனேட் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தன்னை இனங்காட்ட விரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் ‘டோன்’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு இனக்குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகளா அல்லது தீவிரவாத குழுவொன்றைச் சேர்ந்தவர்களா என உறுதிப்படுத்துவதற்கு பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம் என மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தனிப்பட்ட விரோதம் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறத என கராச்சி பொலிஸ் தலைவர் இம்ரான் யாகூப் மின்ஹாஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் 75 ஆவது சுதந்திரத்தினம் நேற்று 14 ஆம் திகதி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.