மெக்ஸிக்கோ பிரஜைகளுக்கு மீண்டும் வீசா கட்டுப்பாடுகள்
மெக்ஸிக்கோ நாட்டு பிரஜைகளுக்கு மீண்டும் வீசா கட்டுப்பாடுகளை விதிக்க கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மெக்ஸிக்கோ பிரஜைகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டிருந்தது.
இதன்படி, மெக்ஸிக்கோ பிரஜைகள் கனடாவிற்குள் இலகுவாக பிரவேசிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.
எனினும், மீண்டும் மெக்ஸிக்கோ பிரஜைகளுக்கு சில வீசா நிபந்தனைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என கனடிய அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றயை தினம் முதல் இந்த வீசா மாற்றம் குறித்த நடைமுறகைள் அமுல்படுத்;தப்பட உள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதிகளவான மெக்ஸிக்கோ நாட்டவர்கள் கடனாவில் புகலிடம் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதனாலும், சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோ பிரஜைகளுக்கான வீசா நடைமுறைகளை மாற்றியமைக்குமாறு லிபரல் அரசாங்கத்திடம் கொன்சவேடிவ் கட்சி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.